பச்சை பட்டாணியில் பல்வேறான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதை வளரும் குழந்தைகளுக்கு பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து கொடுத்து வந்தால் மூளை நன்கு பலம் பெறும். அதுமட்டுமின்றி ஞாபகச்தி அதிகரிக்கும்.

மேலும் வெண்டைக்காயில் இருப்பதை விட மூன்று மடங்கு பாஸ்பரஸ் பச்சைப் பட்டாணியில் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் இதை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தைகளின் புத்திக் கூர்மை பலமடங்கு  அதிகரிக்கும்.

உடல் ஒல்லியாய் இருப்பவர்கள் தினமும் உணவில் பச்சைப்பட்டாணியை சேர்த்து வந்தால் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பச்சைப் பட்டாணியில் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது. அதுமட்டுமின்றி நுரையீரலுக்கும் இதயத்திற்கும் நல்ல பலத்தைக் கொடுக்கிறது.

தினமும் பச்சை பட்டாணியை மருந்து போல காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் இதனால் இதயம் மற்றும் நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.

மேலும் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படாமல் இருக்க பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும்.

அதுமட்டுமின்றி பச்சை பட்டாணியில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. பட்டாணியை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கங்கள் வராமல் தடுக்கலாம். அதுமட்டுமின்றி தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் சத்து குறைவாக காணப்படும்.

மேலும்  பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் சத்து உள்ளது. இதனால் பச்சைப் பட்டாணியை சாப்பிடுவதால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

பச்சை பட்டாணியை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் படிவத்தை தடுகிறது. மேலும் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கிறது.

பச்சை பட்ட்டாணியை உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பால ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

அதுமட்டுமின்றி பச்சைப் பட்டாணியை முளைக்கட்டி சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் பல்வேறான நோய்களை குணப்படுத்துகிறது.

 

This image has an empty alt attribute; its file name is 136a0a4d_1566797054671-576x1024.jpeg

error: Content is protected !!