கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு பரிட்சயமான நடிகையாக வளம் வந்தவர் நடிகை அஞ்சலி.

அறிமுகமான சில படங்களிலேயே விருதுகளை வென்று பல நடிகைகளின் வயிற்றில் புளியை கரைத்தார் அம்மணி. பின்னர் பல வெற்றி படங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருந்த வேளையில் திடீர் என்று குடும்ப பிரச்சனைகள் காரணமாக காணாமல் போனார்.

இடையில், பிரபல நடிகருடன் காதல் , லிவ்-இன்-டுகெதர் வாழ்கை என கிசுகிசுக்கப்பட்டார். இதனால், சில நாட்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்தார்.

எடை கூடியது சினிமா வாய்ப்புகள் குறைந்தன. ஒரு பாடலுக்கு ஆட்டம் போட மட்டுமே அழைப்பு வந்து கொண்டு இருந்தது. தயங்காமல் அதையும் செய்தார். சில திரைப்படங்களில் கவர்ச்சியாக ஆட்டம் போட தயாரானார்.

எடை அதிகரித்த காரணத்தால் பல திரைப்படங்களின் வாய்ப்பை இழந்தார். மீண்டும் தவற விட்ட தனது இடத்தை பிடிக்க அஞ்சலி அதிரடியாக தனது உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார்.

தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் அஞ்சலி. அந்த வகையில் தற்போது தன்னுடைய அழகு இலை மறை காய் மறையாக தெரிவது போன்ற உடை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் “Zoom பண்ணி பாக்குறவங்க கைய தூக்கிடு..” என்று கலாய்த்து வருகிறார்கள்.