மலையாள திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சானியா ஐயப்பன் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தற்பொழுது அனைவராலும் அறியப்பட்டு பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
குயின், லூசிபர் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து பலராலும் அறியப்பட்ட சானியா ஐயப்பன் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று பலரது இதயங்களையும் கொள்ளைக் கொண்டுள்ளார்.
இவ்வாறு வளர்ந்து வரும் நடிகைகளில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் சானியா ஐயப்பன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் காலை செங்குத்தாக தூக்கியவாறு வெளியிட்டுள்ள வேற லெவல் புகைப்படம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது
முக்கியமான கதாபாத்திரத்தில்
சமீபத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக அவதாரம் எடுத்த லூசிபர் திரைப்படம் மலையாளத் திரைப்படத்துறையில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது.
மோகன்லால், டோவினோ தோமஸ், விவேக் ஓபராய், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல பிரபலமான நட்சத்திரங்கள் நடித்திருக்க ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சானியா ஐயப்பன் இப்படத்தில் நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக
இவ்வாறு மலையாளப் படத்துறையில் சென்ற ஆண்டு மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக உருவாகி வெளியான லூசிபர் திரைப்படத்தில் நடித்திருந்த சானியா அதற்கு முன் பல படங்களில் நடித்திருந்தாலும் இப்படம் இவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த சானியா ஐயப்பன் இன்றுவரை மலையாளத் திரைப்படங்களில் மட்டும் தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் படத்திற்கு படம் வித்தியாசமான வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.
கண்களுக்கு குளிர்ச்சியான
இவ்வாறு பிரித்திவிராஜ், மோகன்லால், மம்முட்டி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து வரும் சானியா ஐயப்பன் வளர்ந்து வரும் நடிகையாக பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் சானியா சமீப சில மாதங்களாக கண்களுக்கு குளிர்ச்சியான கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டு வருகிறார்.
வித்தியாசமான முறையில்
பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் கவர்ச்சி உடையில் வித்தியாசமான முறையில் பல புகைப்படங்களை எடுத்து தொடர்ந்து பதிவிட்டு வரும் சானியா ஐயப்பன் தற்பொழுது அனைவரும் வாய் பிளக்கும் வகையில் வேற லெவல் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
செங்குத்தாக தூக்கிக்கொண்டு
வெள்ளை நிற குட்டைப்பாவாடை அணிந்தவாறு ஒரு காலை செங்குத்தாக தூக்கிக்கொண்டு ஒற்றைக்காலில் அசால்டாக நின்றுகொண்டு மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் கவர்ச்சியில் அனைவரும் மிரளும் வகையில் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பலரின் பாராட்டுகளையும் பெற்று மிகப் பிரபலமாகி வருகிறது.