நடிகை ஷாலு ஷம்மு, காதலர் தினத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.கடந்த 2013 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு.
இப்படத்தை அடுத்து மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்திருந்தார். தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக இவர் தனது சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் – ஷாலு ஷம்முவுடன் இணைந்து கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஷாலு ஷம்முவுக்கு அண்மைக்காலமாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். ஷாலு ஷம்மு பப்புகளில் தனது ஆண் நண்பர்களுடன் ஆடும் ஆட்டத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.
அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி ஷாலு ஷம்முவுக்கு பெரும் பிரபலத்தை கொடுத்தது. தொடர்ந்து பிகினி குளியல் பெட்ரூம் போட்டோ ஷுட் என அசத்தி வருகிறார் ஷாலு ஷம்மு. தற்போது, பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்ளவுள்ளார் என்று கூறுகிறார்கள்.
இந்நிலையில், சூசகமாக வெளிப்படுத்தும் விதமாக பெரிய கண்ணாடி ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எவ்ளோ பெரிய்ய கண்ணாடி.. பிக்பாஸ்.. பிக் கண்ணாடி என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.