பதிவுலகம் பல விசித்திரங்களைக் கண்டிருக்கிறது. அதில் ஒன்றாக ஒரு பிரபல பதிவர் சுடுதண்ணீர் செய்வது எப்படி என்று பதிவிடுகிறார். இன்னொரு பிரபல பதிவரோ அதற்கு எதிர்பதிவு எழுதுகிறார்.

தமிழ் மீது வாசம் கொண்ட இன்னொரு பதிவரோ இதற்கு போட்டியாக அவித்த முட்டை செய்வது எப்படி? என்று பதிவிடுகிறார்.

இதுபோன்ற பதிவுகளால் தான் நமக்குள்ளே ஒளிந்திருக்கும் நளபாக சமையல் கலைஞன் வெளியே வருகிறான்.

ஆண்களுக்காக இவர்கள் ஆற்றியிருக்கும் இந்த சமூக தொண்டை முன்னுதாரணமாகக் கொண்டு நானும் எனக்கு தெரிந்த சமையல் முறைகளை இந்த சமூகத்திற்காக சொல்லலாம் என்று முடிவெடுத்து இந்த பதிவை பதிவிடுகிறேன்.

இந்த கட்டாய விடுமுறை காலத்தில் குழந்தைகளோடு வீட்டுக்குள் இருப்பவர்கள் படும் பாடு பெரும் பாடு.

அவர்கள் கேட்டவுடன் கேட்டதை வாங்கி கொடுக்க வில்லை என்றால் அவ்வளவுதான். அதனால்தான் உங்களுக்காக இந்த ரெசிபி

error: Content is protected !!