ராஜா ராணி தொடர்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த தொடரில் நடித்த அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவும் அவரும் காதலர்களாக மாறியதும், பொது இடங்களில் இருவரும் நெருக்கமாக வலம் வரும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளிவந்தது .
இந்நிலையில், சஞ்சீவுக்கு முன் சதீஷ் மானஸ் என்பவரை மானசா காதலித்தது உலகறிந்தது. காலப்போக்கில், அந்த மனுஷனை கழட்டிவிட்டு, ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ்விற்கு விஜய் டிவியே பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்து பிரபலமாக்கியது.
மேலும், இவர்கள் நடித்து வரும் ராஜா ராணி சீரியலை விட இவர்கள் வெளியில் செய்யும் ரொமான்ஸ் தான் மிகவும் பிரபலமானது. பின்னர், கடந்த ஆண்டு மே மாதத்தில் யாருக்கும் தெரியாமல் பெற்றோர்களை எ திர்த்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவருக்கும் அய்லா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளளார் ஆல்யா மானசா.
சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களையம் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிடும் ஆல்யா மானசாவின் விளம்பர படத்திற்காக குளியல் காட்சி ஒன்றில் நடித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.