நடிகர் சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரில்லர் பேய் படம் ‘அவள்’. சித்தார்த் தயாரித்த இந்தப் படம் 2017-ம் ஆண்டு திரைக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து ‘அவள் 2’ படத்தின் பணிகளில் இறங்கினார்.

இதன் கதையைக் கேட்டுவிட்டு, இயக்குநர் விக்னேஷ் சிவன் தானே தயாரிக்க முடிவெடுத்தார் . இதில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்தார். அந்தப் படத்தின் பணிகள் தள்ளிப் போனதால், தனது புதிய படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட தொடங்கினார்.

இதன் முதற்கட்டப் பணிகளான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தது. இந்த படத்திற்கு ‘நெற்றிக்கண்’ எனப் பெயரிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ரஜினி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘நெற்றிக்கண்’. அந்தப் படத்தைத் தயாரித்த கவிதாலயா நிறுவனத்தினரிடமிருந்து அதிகாரப்பூர்வமாகத் தலைப்புக்கு உரிமைப் பெற்று வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் நயன்தாரா கதாபாத்திரம் அவரது முந்தைய படங்களிலிருந்து  சற்றே வித்தியாசப்பட்டு இருக்கும் என்று இயக்குநர் மிலந்த் ராவ் கூறியுள்ளார். ‘ஐரா’, ‘மிஸ்டர் லோக்கல்’, ‘கொ லையுதிர் காலம்’ ஆகிய படங்களின் தோல்வியால், எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமலிருந்தார் நயன்தாரா.

அதற்குப் பிறகு மிலந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில்  இளம் நடிகர் சரண் சக்தி ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இதை கேள்விப்பட்ட ஷாக்கான ரசிகர்கள் பணத்திற்காக எவ்வளவு சின்ன கதாநாயகனா இருந்தாலும் நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்பது இணையத்தில் உலா வருகிறது.