தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.அவ்வப்போது சில சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்து பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.பிக்பாஸ் வீட்டில் சனம் ஷெட்டி-பாலாஜி முருகதாஸ் இடையில் மீண்டும் ஒரு பெரிய சண்டை நடந்தது.

இந்த பிரச்சனை வைரலாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் தற்போது இன்றைய ப்ரோமோக்கள் வெளிவந்துள்ளன.இதில் சுசித்ரா கோர்ட்டில் நீதிபதியாக உள்ளார்.வீட்டில் உள்ளவர்களின் பிரச்சனைகளை தனித்தனியே எழுதச்சொல்கிறார்.

இதில் பாலாஜி மற்றும் சனம் மாறி மாறி புகார்களை குவித்தவண்ணம் உள்ளனர்.இந்த ப்ரோமோவானது இன்று காலை முதல் ப்ரோமோவாக வெளியானது.வெளியான சில மணி நேரங்களையே அந்த ப்ரோமோவை விஜய் டிவி நீக்கிவிட்டது.

சனம் செட்டி டைட்டில் வின்னராக இருக்கும் பியூட்டி பேஜன்டுக்கு எதிராக திரைமறைவில் அட்ஜஸ்மென்ட் செய்து கொண்டதாக அவர் கூறியுள்ளது தெரியவந்துள்ளது.இந்தநிலையில் இந்த ப்ரோமொவனது பின்னாளில் ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.