ப்ளீஸ் நானெல்லாம் சுத்த சைவமாக்கும். சைவத்துல இல்லாத சத்தா அசைவத்துல இருக்கு? எனக் கேட்பவர்களாக இருந்தால் தயவுசெய்து மேலே படிக்காதீர்கள். இது நான்வெஜ் ப்ரியர்களுக்கான பதிவு!
பொதுவாக இறைச்சிப் பிரியர்கள் பலரும் போன்லெஸ் வகை இறைச்சியைத்தான் விரும்பிச் சாப்பிடுவார்கள்.அதில் ருசி அதிகமாக இருந்தாலும் ஈரலைச் சாப்பிட்டால் கிடைப்பதற்கு இணையான சத்துக்கள் இருப்பது இல்லை. காரணம் ஈரலில் அதிகளவு உயிர்சத்துகள் இருக்கிறது.
ரத்தசோகையால் பாதிக்கப்பட்டோருக்கு பரிந்துரைக்கப்படும் போரிக் அமிலம், விட்டமின் பி 12 ஆகியவையும் இதில் அதிகம் உள்ளது. மிக, மிக ஒல்லியாக இருப்பவர்கள் ஆட்டு ஈரலை வாரம் இருமுறை சாப்பிட்டுவந்தால் உடல் எடை கூடும்.
ஈரல் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியையும் அதிகரிக்கும். கர்ப்பிணி பெண்கள், ஆட்டு ஈரலைச் சாப்பிட்டுவந்தால் கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
அதேபோல் கர்ப்பிணிகளுக்கு அதிக அளவில் சாப்பிடமுடியாத். இவர்கள் குறைந்தளவு ஆட்டு ஈரலைச் சாப்பிட்டாலே கருவில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கும்.
அதேநேரம் ஆட்டில் கொலஸ்ட்ரால் அதிகம் என்பதால் இதைச் சாப்பிடும்போது பூண்டையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே சமைத்து வாரத்தில் நான்குநாள்கள்கூட ஈரலை சாப்பிடலாம்.