கமலின் வீட்டு விசேஷங்களில் கமல் இருக்கிறாரோ இல்லியோ தொடர்ந்து நடிகை பூஜாகுமார் பங்கேற்று வருகிறார். இதனை கவனித்த நெட்டிசன்கள் அவர் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா என  கேள்வி எழுப்பிகின்றனர்.

நடிகை பூஜா குமார் ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் நடித்து கொண்டுள்ளார்.

கே.ஆர் இயக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான “காதல் ரோஜாவே”  படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார். அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆனார்.

மீண்டும் பூஜா குமாரை கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் ஜோடி போட்டிருந்தார்.

பின்னர்  கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவரை ஜோடியாக போட்டிருந்தார். கமல் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் கூடவே தோன்றுகிறார்.

அடுத்ததாக சத்யராஜின் மகன் சிபிராஜிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதில் சில நெருக்கமான காட்சிகளில் சிபிராஜுடன் நடிக்க உள்ளார் . பூஜாகுமார் சிபிராஜை விட ஐந்து வயது மூத்த்தவர். இதனை அறிந்த நெட்டிசன்கள் ஆண்ட்டிக்கு இந்த வயசுல இது தேவையா? பா வம்  நடிகர்னு கமெண்ட் அடித்து வருகிறார்கள்.