தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை லட்சுமி மேனன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
லட்சுமி மேனன் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்.பொதுவாக மலையகத்தைச் சேர்ந்த நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது அந்த வகையில் நடிகை நயன்தாராவும் மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான்.
தற்போது தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்து வருகிறார். நடிகை லக்ஷ்மி மேனன் தற்போது கும்கி திரைப்படத்திற்கு பிறகு ஆக பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமார் நடிப்பில் வெளிவந்த சுந்தரபாண்டி என்ற திரைப் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
எப்பொழுதும் திரைப்படங்களில் குடும்பப் பாங்காக இருக்கும் கதாபாத்திரத்தையே தேடி தேடி நடித்த நமது லட்சுமிமேனன் அதன்பிறகு திரைப் பட வாய்ப்பிற்காக கொஞ்சம் மாடர்னாக உடையில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.
ஆனால் அவர் கவர்ச்சி உடைகள் அணிவது மிகவும் கேவலமாக இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் இதன் காரணமாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே போயின. கடைசியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ரெக்க திரைப்படத்தில் நடித்த லட்சுமிமேனன் தற்போது சினிமா பக்கமே தலை காட்டவில்லை.
ஏனெனில் தன்னுடைய கல்லூரி படிப்பை முழுவதும் முடித்ததும் பிறகு தான் இனிமேல் சினிமாவிற்கு வரப் போவதாக கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சமீப பேட்டி ஒன்றில் நடிகை லட்சுமிமேனன் தற்போது அவர் குச்சிப்புடி நடனம் பயின்று வருவதாக கூறியுள்ளார்.
சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது வெளியிட்டு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சகட்டு மேனிக்கு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.