தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை யாஷிகா வித்தியாசமான, கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
நடிகை யாஷிகாவிற்கு ஓஷின் ஆனந்த் என்ற தங்கை உள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது மிகவும் சிறுப்பெண்ணாக இருந்தார். ஆனால் இரு வருடங்களில் தற்போது தனது அக்காவையே மிஞ்சும் அளவிற்கு நன்கு வளர்ந்து விட்டார்.
மேலும் அவர் அக்காவிற்கு போட்டியாக மிகவும் கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் தெறிக்கவிட்டு வருகிறார். இவரது புகைப்படங்களுக்கு லைக்ஸுகள் குவிந்து வருகின்றது.