நடிகை மோனாலிசா ஒரியா வீடியோ ஆல்பங்களில் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் போஜ்புரி திரையுலகிற்கு அறிமுகமாகி, அங்கு அவர் பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டில், போஜ்புரி திரையுலகில் மிகவும் விரும்பப்பட்ட நடிகைகளில் மோனாலிசாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் நடிகை மோனாலிசா போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்ராந்த் ராஜ்புட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிக விமர்சையாக நிகழ்ச்சியிலேயே கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டிலேயே இருக்கும் நடிகை மோனாலிசா தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக உடற்பயிற்சி செய்து வருகிறார்.

தன்னால் ஜிம்முக்கு செல்ல முடியவில்லை என்றாலும் வீட்டிலேயே தன்னால் முடிந்ததைச் செய்ய முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் நடிகை மோனாலிசா.

யோகாசனங்கள் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மோனா லிசா பதிவிட்டிருக்கிறார்.

மேலும் அந்தப் புகைப்படத்திற்கு கேப்ஷனாக, முழு-ஸ்பிளிட்டில் எனது முதல் முயற்சி! எனது தனிமைப்படுத்தப்பட்ட நாட்களில் இதைப் பயிற்சி செய்ய எனக்கு போதுமான நேரம் இருந்தது .

தற்போது நடிகை மோனாலிசா வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் நடிகை மோனாலிசாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

error: Content is protected !!