தமிழ் சினிமாவில், ‘அவன் இவன்’ , ‘தெகிடி’ போன்ற சில வெற்றிப்படங்களில் நடித்தும், இதுவரை நடிகை ஜனனியால் முன்னணி நாயகி என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை.

மீண்டும் திரையுலகில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்கிற கனவோடு, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.

ஆரம்பம் முதலே, தன்னுடைய அருமையான விளையாட்டால்… வெற்றி பெரும் பெறுபவர்களின் லிஸ்டில் இவருடைய பெயரும் இடம்பெற்றாலும், சில விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல்… வெற்றியை மட்டுமே தன்னுடைய நோக்கமாக கொண்டு விளையாடியதால்… நிகழ்ச்சியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் அடுத்தடுத்து பட வாய்ப்புகளில் பிசியாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை இவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. ஆனால் இந்த வருடம் மட்டும் இவருடைய கை வசம், தொல்லைகாட்சி, வேழம், கசட தபற, பகீரா உள்பட 6 படங்கள் உள்ளது.

இந்நிலையில் கொரோனா லாக் டவுன் சமயத்தை பயன் படுத்திகொண்டு, நடிகை ஜனனி அவருடைய தங்கையுடன் சேர்ந்து புதிய பிஸ்னஸ் ஒன்றை துவங்கியுள்ளார்.

சினிமா, பிஸ்னஸ் என்ற இரட்டை குதிரை சவாரி செய்ய ஆரம்பித்துள்ள ஜனனி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.