பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில படங்களில் கமிட் ஆகி இருந்தார் அபிராமி. ஆனால், ஒரு படம் கூட இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதே போல இந்த லாக் டவுன் நேரத்தில் அபிராமி அடிக்கடி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட வண்ணம் இருந்தார்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஆடை உடுத்திய விதம், மதுமிதாவிற்கும் இவருக்கும் இடையே நடந்த கலாச்சாரம் பிரச்சனை, அபிராமி – கவின் காதல், முகென் காதல் என  எழுந்த இவரது பிரச்சனை சமூக வலைத்தளங்களில் மிகவும் பெரிதுபடுத்தி பேசப்பட்டது.

ஆனால், இதை எல்லாம் மறக்கும் வகையில் இவருடைய படம் அமைந்தது. கடந்த ஆண்டு வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபிராமி அவர்கள் சிறப்பான முறையில் நடித்து அனைவரையும் ஈர்த்திருந்தார்.

அதே போல தனது பிட்னஸ்ஸில் கண்ணும் கருத்துமாக இருந்து வரும் அபிராமி கடுமையான உடற் பயிற்சிகளை கூட செய்து வந்தார். இப்படி ஒரு நிலையில் அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் பிக் பாஸில் பார்த்ததைவிட உடல் உடல் கூடி கொஞ்சம்கொலு மொழு வென இருக்கிறார். தற்போது நடிகை அபிராமி அவர்கள் புதிய அதிரடியாக சில விஷயங்களை செய்துள்ளார். அது வேறு ஒன்னும் இல்லைங்க சென்னை-28, ஆரணிய காண்டம் போன்ற படங்களின் தயாரிப்பாளரும், பாடகருமான எஸ் பி பி சரண் இயக்கும் வெப்சிரிஸ்ஸில் நடிகை அபிராமி அவர்கள் நடிக்க உள்ளார்.

error: Content is protected !!