இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா திரைப்பட மூலம் அறிமுகமானார் நடிகை சமந்தா. இதே படம் தெலுங்கில் யே மாயா சேஸ்வே என்ற பெயரில் வெளிவந்தது அதே படம் மூலமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.
முதல் படத்திற்கே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார் சமந்தா. இதன் பின் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி போன்ற படங்களில் நடித்தார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சமந்தாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ராஜமௌலி இயக்கிய இகா தான் இப்படம் தமிழில் நான் ஈ என்ற பெயரில் வெளிவந்தது.
இப்படத்திற்காக சிறந்த தெலுங்கு நடிகைக்கான தேசிய பிலிம்பேர் விருதை பெற்றார். இதே ஆண்டு தமிழில் இவரது நடிப்பில் வெளியானது நீதானே என் பொன் வசந்தம் இப்படத்திற்கும் சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார் சமந்தா.
தொடர்ந்து தமிழில் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார் சமந்தா. தமிழில் முன்னணி நடிகர்கள் உடன் கைகோர்த்து நடித்தார் சூர்யா உடன் அஞ்சான், 24 மற்றும் விஜய் உடன் கத்தி, தெறி விக்ரம் உடன் பத்து என்றதுக்குள்ள தனுஷ் உடன் தங்கமகன் போன்ற படங்கள் இவருக்கு இங்கு ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது.
திருமணதிற்கு பின்னர் சில காலம் கவர்ச்சி காட்டாமல் ஒதுங்கியிருந்த சமந்தாவிற்கு நல்ல பெயர் சொல்லும் கதை மற்றும் கதாபாத்திரங்கள் கிடைத்தன.
சமீப காலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார் அம்மணி. அந்த வகையில்,அம்மணி வெளியிட்டுள்ள கிளு கிளு புகைப்படங்கள் தான் தற்போது வைரல்.
இந்த புகைப்படங்களை பார்த்த சிலர், திருமணம் ஆன பின்னும் இவ்வளவு கவர்ச்சி தேவையா ? என்றும் இன்னும்நான் கூட சாக்லேட் புகைப்படம்ன்னு நெனச்சிட்டேன் என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.