நடிகை பிரியா ஆனந்த் அவர்கள் முன்னணி நடிகையாக வரவில்லை என்றாலும் தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். கடைசியாக ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த எல் கே ஜி என்ற படத்தில் நடித்திருந்தார் பிரியா ஆனந்த். தற்போது அவருக்கு கைவசம் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லை.

நடிகர் ஜெய் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வாமனன்” என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் திரையுலகில் நுழைந்தார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் பல படங்களில் நடித்தார்.

சமீபத்தில் நடிகை பிரியா ஆனந்த் அவர்கள் ஃபேர்னஸ் சார்ந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி இருந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் பிரியா ஆனந்த் அவர்கள் கூறியது, நான் கண்டிப்பாக ஃபேர்னஸ் சம்மந்தமான விளம்பரத்தில் நடிக்க மாட்டேன். அதோடு நான் மாடலிங் கூட பண்ணது கிடையாது.

பாலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கியவர்  நடிகை ஸ்ரீதேவி. அவர் தென் இந்தியாவில் இருந்து சென்ற நடிகை தான். தற்போது பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா படுகோனும் தென் இந்தியாவில் இருந்து சென்றவர். தென்னிந்திய பெண்களின் முகத்தில் இருக்கும் கலையே தனி. அதை விட்டுட்டு ஃபேர்னஸ் க்ரீம் போட்டால் தான் அழகு, வெள்ளை என்று சொல்லுவது முட்டாள் தனமான ஒன்று. இதுக்காக எவ்வளுவு பணம் கொடுத்து இந்த மாதிரி நடிக்க சொன்னாலும் நான் நடிக்க மாட்டேன்.

தற்போது இவர் நடித்த சுமோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று . அதே போல கொண்டிருக்கிறது. கன்னடத்தில் இவர் RDX மற்றும் ஜேம்ஸ் என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார். மேலும், இவர் A Simple Murder என்ற வெப் தொடரிலும் நடித்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் இவர் குளியல் துண்டை கட்டிக்கொண்டு கழுத்தில் 2000 ரூபாய் மாலையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்த போட்டோ ஒன்று  இணையத்தில் வைரலானது. பின்னர் தான் தெரிந்தது அது A Simple Murder தொடருக்கான ப்ரோமோஷன் என்று.