தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாடல்களை பாடியுள்ளார்.  மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக்கூடியவர். அதில் ஒரு சிறந்த உதாரணம் தரமணி.

பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றியாக அமைந்தது.

உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் இருக்காமலில்லை. சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என கூறியுள்ளார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா  நான் திரும்ப வந்துள்ளேன் என்பது போல பல புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், ஆண்ட்ரியா sleeveless பனியனில் போஸ் கொடுத்ததை கவனித்த ரசிகர்கள், முரட்டு அரேபிய குதிரை என்று வர்ணித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.