பெண்கள் மற்றும் ஆண்களின் அழகில் தலைமுடி முக்கிய பங்கு வகிக்கின்றது. முகத்தை மட்டும் பராமரித்தால் போதாது. தலை முடியையும் பராமரிக்க வேண்டும். என்னதான் அலங்காரம் பண்ணினாலும் தலையில் முடி இல்லையென்றால் உங்கள் அழகில் பாதி இல்லை என்று தான் அர்த்தம்.
முடி உதிர்வதால் பலருக்கு மன அழுத்தம் கூட ஏற்படும். உண்ணும் உணவே மருந்து என்று சொல்வார்கள். இன்றைய காலக்கட்ட உணவு முறையும், பராமரிப்பு இல்லாமல் போவதுதான் தலை முடி உதிர்வுக்கு காரணமாக இருக்கின்றன. முடி உதிர்வதை தடுக்க அதிகமானோர் பணத்தை விரயம் செய்வார்கள். அதெல்லாம் வேண்டாம். இயற்கையான வழியில் தலை முடியை பராமரித்தாலே போதும்.
சரி வாருங்கள் உங்கள் தலைமுடியை அசுர வேகத்தில் வளர வைக்க தேவையான இரு மூலிகைகள் பற்றி பார்க்கலாம். ஒன்று கரிசலாங்கண்ணி மற்றொன்று நெல்லிக்காய் இவற்றை வைத்து எப்படி நமது முடியை அதிகமாக அடர்த்தியாக வளர வைக்கலாம் என்று கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்