தமிழ் மற்றும் தெலுங்கு என ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கினார் நடிகை அனுஷ்கா. ஏன் இரு திரைத்துறையில் முதன்மையாக இருந்து வந்தார் என்று கூட சொல்லலாம். ஆம் நடிகை அனுஷ்கா மற்ற நடிகைகளை விட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம்123, அஜித்துடன் என்னை அறிந்தால், ரஜினியுடன் லிங்கா, விக்ரமுடன் தெய்வ திருமகள் என பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அர்யவுடன் இவர் நடித்த இஞ்சி இடுப்பழகி எனும் படத்தில் இவர் தனது உடல் எடையை அதிகரித்தார்.

அதனால் தற்போது வரை அனுஷ்கா வால் தனது உடல் எடையை குறைக்க இயலவில்லை. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வர குறைய துவங்கியது. மேலும் இவர் கடைசியாக நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படம் பாகுபலி 1,2 தான். இந்நிலையில் லாக்டவுன் என்பதால் படவாய்ப்புகள் குவிந்தும் நடிக்காமல் இருந்து வருகிறார்.

இதற்கிடையில் பாகுபதி படத்தினை தயாரித்த யுவி கிரொயேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். கொரானா லாக்டவுன் முடிந்த பிறகு முறையாக அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளனர். இப்படத்தில் நடிகைக்கு முழு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருப்பதால் நடிகை அனுஷ்கா ஷெட்டி பிகினியில் நடிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளாராம்.

இதை அறிந்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடையா..? என்று கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், இதற்காக உடல் எடையை குறைத்து பிகினிக்கேற்ற உடல் திரும்ப கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார் அனுஷ்கா.

மேலும், முக்கிய நட்சத்திர இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார். அனுஷ்காவிடம் கதை சொல்ல உடனே பிடித்துவிட்டதாம். மேலும் இயக்குனர் 60 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளாராம். இதனால் அனுஷ்கா ரூ 3 கோடி சம்பளம் வேண்டும் என கண்டிசன் போட்டுள்ளாராம்.

என்னுடைய படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்படுகின்றன. மூன்று மொழிகளில் நான் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் 3 கோடி ரூபாய் தாராளமாக கொடுக்கலாம்.

படத்தில் ஹீரோவுக்கு ரூ 10 கோடி சம்பளம் இருக்கும் போது எனக்கு ரூ 3 கோடி தரலாமே என கூற தயாரிப்பாளரும், இயக்குனரும் ஓகே சொல்லிவிட்டார்களாம். இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.