இன்றளவில் உள்ள சிலருக்கு உடலில் ஆங்காங்கே கொழுப்பு கட்டிகளானது ஏற்பட்டு இருக்கும். இந்த கட்டிகளை லிபோமா என்றும் அழைப்பார்கள். உடலின் கொழுப்பு திசுக்களில் உட்பகுதியில் ஏற்படும் வளர்ச்சி அதிகரிக்கும் நிலையின் காரணமாக இது ஏற்படுகிறது. இது புற்றுநோய்க்கட்டிகள் கிடையாது. இந்த கொழுப்பு கட்டிகளானது கழுத்து., அக்குள்., தொடை மற்றும் மேற்புற கைகளின் பகுதியில் ஏற்படும்.
சில நபர்களுக்கு இக்கட்டிகள் எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் தோன்றும்.. இந்த கட்டிகளின் வளர்ச்சிக்கு சரியான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில்., நமது மரபணுக்கள் மற்றும் உடலின் பருமனை பொறுத்து வளர வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. இந்த கட்டிகள் எந்த விதமான வலியையும் ஏற்படுத்தாது என்றாலும்., பொறுமையாக வளரும் தன்மையை கொண்டது.
இக்கட்டிகளை நீக்குவதற்கு அறுவை சிகிச்சை முறைகள் அல்லது லேசர் சிகிச்சைகள் மூலமாக அகற்ற இயலும். மருத்துவரின் ஆலோசனைப்படி இக்கட்டிகளை அகற்றினாலும்., மீண்டும் ஏற்படாது என்பது உறுதியாக கூற இயலாது. இக்கொழுப்பு கட்டிகளை கரைக்க இயற்கை வழிமுறைகள் உள்ளது. இது குறித்து நாம் இனி காண்போம்.