நாம் நமது சந்தோஷத்தை வெளிப்படுத்த சிரிப்பையே பிரதானமாக்குகிறோம். அந்த சிரிப்பை நாம் சிரிக்கும் போது நமது பற்களில் கறை இருந்தால் நமது சந்தோசம் முழுமையானதாக இருக்காது.
நம் பற்களில் இருக்கும் கரையை போக்க பயன்படும் இயற்கையாக தானாகவே வளரும் செடிகளில் ஒன்று கண்டங்கத்திரி. இதை ஊருக்கு ஒரு பெயரில் அழைத்தாலும், பலவிதமான உடல் சுகவீனங்களை இந்தச் செடி போக்குகிறது. இது பல் பிரச்சனையையும் போக்குகிறது.
கண்டங்கத்திரி. இது உஷ்ணம் நிறைந்த பகுதியில் தான் அதிகமாக முளைக்கும். சின்ன கண்டங்கத்திரியின் காய்கள் பச்சை நிறத்திலும், பழுத்த பிறகு மஞ்சள் கலரிலும் இருக்கும்.
இந்த பழத்தில் இருக்கும் விதையானது நம் வாய்க்குள் இருக்கும் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது.
பல்லில் கிருமிகள் இருப்பதால் தான் அது சொத்தை பல்லாக மாறுகிறது. இதனால் பல்வலியும் சேர்த்து ஏற்படும்.
இதை கட்டுப்படுத்த கண்டங்கத்திரி செடியை வேரோடு எடுத்து வந்து நன்றாக காயவைக்க வேண்டும். அதில் பூ, செடி, காய், பழம் எல்லாம் இருக்க வேண்டும்.
அந்த செடி மொத்தமாக நன்றாக காய்ந்த பிறகு, அதை சின்ன சின்ன துண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும்.
அது நன்றாக கொதித்த பிறகு, அந்த தண்ணீரை வடிகட்டி வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தாலே பல்லில் இருக்கும் கிருமிகள் அனைத்தும் வெளியில் போய் விடும்.
இதேபோல் காய்ந்த கண்டங்கத்திரி பழத்தில் உள்ள விதைகளை எடுத்து, அதை ஒரு காட்டன் துணியில் வைத்து சுற்றிக்கொள்ள வேண்டும்.
இதை இப்போது ஒரு கிண்ணத்தில் வைத்து நன்றாக சூடுபடுத்த வேண்டும். இப்போது இந்த விதைகளில் இருந்து வரும் புகையை ஏதாவது ஒரு பாட்டிலை பாதியாகக் கட் செய்ய வேண்டும்.
அதன் மூலமாக உங்களுடைய வாய்க்குள் அனுப்ப வேண்டும். இப்படி செய்வதாலும் பல்லில் இருக்கும் கெட்ட கிருமிகள் போய்விடும். கூடவே பல்வலியும் போய் விடும்.