நடிகை சாவித்திரியின் வாழ்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது வாங்கிய நேரமோ என்னமோ கீர்த்தி சுரேஷுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார்.

அதற்கு முக்கிய காரணம், ஹிந்தி பட வாய்ப்பை பெற உடலை குறைத்தது தான் முக்கிய காரணம் என்கிறது கோலிவுட். கைவசம் தெலுங்கில் ஒரே ஒரு படம் மட்டுமே வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர்களிடம் கவர்ச்சியில் களமிறங்கி ரெடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இருந்தாலும் எலும்பும் தோலுமாக இருக்கும் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்களுக்கு பெரிதும் விருப்பம் இல்லை. இதை நேரடியாகவே அவரிடம் தெரிவித்து விட்டார்களாம்.

இதனால் இந்த ஊரடங்கை பயன்படுத்தி உடல் எடையை மீண்டும் கூட்டி பழையபடி கொழுக் மொழுக் என உருவாக இருக்கிறாராம். அந்த முயற்சியில் பாதி வெற்றி அடைந்து விட்டாராம்.

ஏர்போர்டில் சோடா பொட்டி கண்ணாடியில் வெளியிட்ட புகைப்படம் வைரலானது. தற்போது டி-ஷர்ட் போட்டு கும்முனு இருக்கும் கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பார்த்து கம்முனு இருக்க முடியாமல் அவஸ்தைப்படுகின்றனர் ரசிகர்கள்.