வேர்க்கடலையில் செய்த கடலை மிட்டாயை சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதற்கு நிலக்கடலை, கடலைக்காய் என்ற வேறு பெயர்களும் உண்டு. வேர்க்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச்சத்து தான். காரணம் யாதெனில் இதனால் உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற பயம் தான் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

ஆனால் பல ஆராய்ச்சி செய்ததில் இந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது. காரணம் வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும், அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்ற படியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.

மண்ணுக்கடியில் விளையும் உணவுகளை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும் என்பார்கள். ஆனால் வேர்க்கடலை சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு இரத்தத்தில் மிக மிக குறைந்த அளவே சேருவதால் பயமின்றி சாப்பிடலாம்.

மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆகவே இவர்கள் அன்றாட உணவில் தைரியமாக வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.

வேர்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது. வேர்க்கடலையில் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரிப்பதில்லை. அதற்கு மாறாக இரத்தக் கொதிப்பு குறையும்.

வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால்உடலில் இரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இதில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பொருட்கள் மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் உருவாகாமல் தடுக்கிறது.

 

வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. ஆகவே கர்ப்பிணி பெண்கள் கூட வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது. வேர்க்கடலையில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் புற்றுநோய், உருவாகக் காரணமாக இருக்கும் செல்களை அழித்து விடுகின்றன.

குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது. இவ்வாறு பல வகையான நோய்களுக்கு ஒரே மருந்தாகும் நிலக்கடலையை எப்படி சாப்பிடால் பலன் கிடைக்கும் என்று கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம் வாங்க.