விஜய் தொலைக்காட்சியில் காமெடிக்கு என நடத்தப்படும் நிகழ்ச்சி தான் கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல காமெடி நடிகர்கள் உருவாகி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு சில நடிகர்கள் திரைப்படங்களிலும் கூட நடித்து பிரபலமாகி இப்பொழுது நடிகராகவும் திகழ்கிறார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களும் கூட முதலில் இந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகி தற்பொழுது நடிகராக வலம் வருகிறார். அவ்வகையில் அடுத்தபடியாக மிகவும் பிரபலமாகி கொண்டு வருபவர் தான் காமெடி நடிகர் ரோபோ ஷங்கர்.

தமிழ் திரையுலகம் பொருத்தவரை தன்னுடைய வாரிசுகளும் இந்தப் பணியில் ஈடுபட வேண்டும் என்று ஒரு சிலர் கணிக்கிறார்கள். இன்னும் சிலர் அதை எதிர்க்கிறார்கள். அந்த வகையில் நடிகர் ரோபோ ஷங்கரின் மகளான இந்திரஜா தமிழ் சினிமா உலகில் களம் இறக்கியுள்ளார்.

இவர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இத்தரைப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, விவேக், காமெடி நடிகர் யோகிபாபு, டேனியல் பாலாஜி போன்றவர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இத் திரைப்படத்தில் சில புது முகங்களை அறிமுகப்படுத்தி உள்ளார் இப்படத்தின் இயக்குனர். அந்த வகையில் நமது இந்திரஜாவும் உண்டு.

முதல் திரைப்படத்திலேயே தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தன்னுடைய தந்தைக்கு நிகராக ரசிகர்களை கவர்ந்து மிகவும் பிரபலமடைந்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் நடிக்க தன்னுடைய மகளுக்கு வாய்ப்பு வந்து கொண்டே இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் நடிகர் ரோபோ சங்கர் சமூக வலைத்தளங்களில் கூறியுள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது இந்திரஜா சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த வகையில் தற்பொழுது ட்ரெடிஷனல் ஆடையை அணிந்து கொண்டு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.