இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கின்ற பெரிய பிரச்சனை தொப்பை. தற்போது சிறிய வதிலேயே தொப்பை வந்து விடுகிறது. தொப்பையை குறைக்க நிறைய பேர் டயட் ஃபாலோ பண்ணுவாங்க. அதுமட்டுமின்றி அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப உடல் எடையும் வளர்ந்து வரும் போது அவர்கள் இன்னும் அதிக உடல் எடை அதிகரித்து காணப்படும். மேலும் இன்றைய சூழ்நிலையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் மிக முக்கிய பிரச்சனை உடல் எடை அதிகரிப்பு தான்.
இந்த பிரச்சனையை வீட்டில் இருந்தபடியே எப்படி சரிசெய்யலாம் என்று பார்ப்போம். இதற்கு நம் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் போதும். இதை வைத்து உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் பசியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தேங்காய் எண்ணெயில் கலோரிகள் இல்லை என்று சொல்ல முடியாது. மற்ற எண்ணெயைப் போலவே தேங்காய் எண்ணெயிலும் கொழுப்புகள் உள்ளன.
ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு தேக்கரண்டி உட்கொள்ளலாம். அதிகபட்சமாக தினமும் தேங்காய் எண்ணெயை இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி வரை பருகலாம்.
சமையல் எண்ணெய்யாகப் பயன்படுத்துங்கள்:
உடல் எடை அதிகரிப்புக்கு நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புகள் ஒரு முக்கிய காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உண்ணும் உணவில் கொழுப்புகளை அதிகமாக சேர்க்காமல் இருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி தேங்காய் எண்ணெய் கொழுப்பை வேகமாக எரிக்கிறது. எனவே நாம் அன்றாடம் உண்ணும் உணவில் தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி தேங்காய் எண்ணெயை சுத்திகரிக்கப்பட்ட, மற்ற எண்ணெய்களுடன் சேர்த்தும் சமைக்கலாம்.
20 நிமிடங்களுக்கு முன் உட்கொள்ளுங்கள்
தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கையான பசியின்மை ஆகும். இது மற்ற சமையல் எண்ணெய்களில் இல்லாத வகையில் உடல் எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மற்றொரு காரணம் தேங்காய் எண்ணெயை விஞ்ஞானிகள் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடு என்றும் கூறுவார்கள்.
எச்சரிக்கை:
உடல் எடை குறைப்புக்கு தேங்காய் எண்ணெய் அற்புதமானதாக இருக்கும். தேங்காய் எண்ணெய் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடு (எம்.சி.டி) எண்ணெயின் ஒரு நல்ல பொருளாக கருதப்படுகிறது.
இவை கொழுப்பின் இழப்பை செயல்படுத்துகிறது. மற்ற வகை கொழுப்புகளிலும் இது நிறைந்துள்ளதால் நீங்கள் கவனமாக இதை கையாள வேண்டும்.
மேலும் சில நேரத்தில் தேங்காய் எண்ணெயில் உள்ள கலோரிகள் எடை அதிகரிப்பிற்கும் வழிவகுக்கும். அதுமட்டுமின்றி தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி வந்தால் விரைவில் எடை குறையும்.