உங்கள் வீட்டில் மிளகு இருந்தால் வீணாக பணம் செலவு செய்ய தேவை இல்லை..! உங்கள் வீட்டுக்கு வைத்தியர் மிளகு தான்…!

இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர் அதனால் அவர்களை எந்த நோய்யும் நெருங்கியதில்லை தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது

உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல் மலச்சிக்கல் ஜலதோசம் செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவுதசை விகாரங்கள் பல் பாதுகாப்பு பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது

கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும், கரோட்டின், தையமின், ரிபோ-ஃப்ளோவின், நயாசின் போன்ற வைட்டமின்களும் இதில் உள்ளது.இது நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, கோழை, இருமல் முதலியவற்றை நீக்கும் மருந்தாகவும் இது பயன் படுத்தப்படுகிறது.

இது நமது வயிற்றில் உருவாக்கப்படும் கெட்ட வாயுக்களை நீக்கி உணவைச் செரிக்க வைத்து நமது உடலுக்கு வெப்பத்தைத் தரும் இதன் காரம் உணவில் உள்ள நச்சுத் தன்மையை நீக்க வல்லது. அதன் அரிய மருத்துவ குணங்கள் அறியாமல், காரத்திற்காக மட்டுமே மிளகு உணவுப்பொருட்களாக சேர்க்கப்படுகிறது என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் அதிர்ச்சியூட்டும் உண்மை!

அமெரிக்க, மிசிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வுகளின் படி பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கிறது. மிளகில் உள்ள “பெப்பெரைன்” புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக அது தெரிவிக்கிறது.

மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ,சி, கரோடின்களும், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீரேடிக்கல்களை (pre – radicals) அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. சருமப் புற்று நோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடற் புற்று நோய்களையும் மிளகு தடுத்து வருவதையும், பல ஆய்வுகள் நிருபணமாக்கியுள்ளது. பப்பெரைனைத் தவிர மிளகில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஃப்ளுவனாய்டுகள், கரோடீன் மற்றும் இதர ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளன.

நமது ஜீரணசக்தியை அதிகரித்து, நாக்கின் ருசி ஆதாரங்களை தூண்டி, வயிறானது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச் செய்கிறது. மேலும், அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை, இது கட்டுப்படுத்துகிறது.

உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவுகிறது. நம் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் தன்மை கொண்டது. மேலும் இது கொழுப்பு செல்களை சிதைத்து உடல் பருமனாவதை தடுக்கிறது. மற்றும் உடலில் சுரக்கும் வியர்வையின் அளவை அதிகரித்து உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்கவும், சிறுநீர் சீராக வெளியேறவும் உதவுகிறது. இதன் காரணமாக, நமது உடலில் உள்ள கூடுதல் நீர் மற்றும் நச்சுப்பொருட்கள் வெளியேற்றப்படுகிறது.

நமது உடலில் ஏற்படும் வாயு மற்றும் வயிற்று உபாதைகளை கட்டுப்படுத்துகிறது. சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணமாகாமல் இருப்பது அல்லது மலச்சிக்கலால் ஏற்படும் வயிற்று கோளாறுகளை, இது பெரிதும் கட்டுப்படுத்துகிறது. கார்மிநேடிவ் என்ற பொருள் மிளகில் உள்ளதால் வாய்வு, வயிற்று பொருமல் மற்றும் வயிற்று வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

இது தலையில் வரும் பொடுகை அழிக்கிறது மிளகை நன்றாக பொடி செய்து, சிறிது தயிருடன் கலந்து தலையில் பரவலாகத் தடவி அரை மணிநேரம் கழித்து தலை முடியை நன்றாக அலசவேண்டும். (அன்று எந்த விதமான ஷாம்புக்களும் பயன்படுத்தாமல் இருக்கவேண்டும் மறுநாள் ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும்).

சளித் தொல்லைக்கு:

மிளகை நன்றாக பொடியாக்கி அதை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளித் தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளித் தொல்லை உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்துப் பொடித்து அதனை தினம் அரை தேக்கரண்டி மூன்று வேளைகள் சாப்பிட குணமாகும்.

சிறிதளவு மிளகு, ஓமம், உப்பு மூன்றையும் கலந்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், சிறிது அரிசியும், மிளகும் சேர்த்து அரைத்து தோசையாக சாப்பிட்டு வர சளி குணமாகும்.

பற்கள் பளிச்சிட:

மிளகுப்பொடியுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, பற்ச்சொத்தை, ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் போன்றவை குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை நீங்கும்.

தலைவலி

மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதைத் தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை விளக்கில் சுட்டு அதன் புகையினை முகர்ந்தால் தலைவலி மற்றும் ஜலதோஷம் போகும்.

இரத்தசோகைக்கு:

கல்யாணமுருங்கை இலை (முள் முருங்கை) முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டு வர இரத்தசோகை குணமாகும்.

பசியின்மைக்கு:

மிளகானது நாக்கிலுள்ள சுவை மொட்டுகளைத்தூண்டி ஜீரணசக்தியை ஊக்குவிக்கிறது. இதனால் பசியின்மையால் தவிப்பவர்களுக்கு மிளகு இயற்கையின் வரப்பிரசாதமாக விளங்குகிறது. உணவில் சிறிதளவு மிளகை சேர்த்துக் கொண்டால் பசியின்மையை போக்கும். ஒரு தேக்கரண்டி மிளகை வறுத்துப் பொடி செய்து அதனுடன் கைப்பிடியளவு துளசி சேர்த்து கொதித்து ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிற்று உப்புசம் தீரும்.

ஊட்டச்சத்துக்களை உடல் திறமையாக பயன்படுத்தவும் உதவும். தினசரி அரை கிராம் மிளகைப்பொடி செய்து வெதுவெதுப்பான நீருடன் பருகிவர பசி உண்டாகும். உமிழ்நீரை பெருக்கி, உணவை செரிக்க வைக்கும். மிளகுடன், சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

சருமத்தை தூய்மையாக்கும்

உடலில் உள்ள வியர்வை மற்றும் நச்சுப் பொருட்கள் வெளியேற மிளகு உதவுவதோடு அழுக்கு நீக்கியாகவும் செயல்படுகிறது. மிளகை அரைத்து முகத்தில் மிகவும் லேசாகத் தடவினால் அது இறந்த செல்களை நீக்கி, இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, சருமத்திற்கு அதிக ஆக்சிஜனும் ஊட்டமும் அளிகிறது. மேலும் அதிலுள்ள பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் சருமத்தை மரு மற்றும் பருக்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து காக்கும்.