வழக்கமாக பானை உள்ளிட்ட செம்பு பொருள்களை புளியை வைத்து சுத்தம் செய்வார்கள். அது முழுமையாக சுத்தமும் ஆகாது. கடினமான வேலையும் கூட! அதற்கு மாற்றாக எளிமையான ஒரு விசயம் இருக்கிறது. அதுபற்றித் தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்
நாம் தினம் தோறும் தண்ணீர் பிடித்து வைப்பதால் செம்பு குடத்தின் வெளிப்புறப் பகுதி கருமை நிறத்திலும், உட்பகுதியில் வெண்மை நிற திட்டுகளுமாக இருக்கும். இதை வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே க்ளியர் செய்து விட முடியும். பொதுவாக செம்பு குடத்தில் தண்ணீர் விட்டு வைப்பதால், தண்ணீரில் இருக்கும் பாக்டீரீயாக்கள் அனைத்தும் அழிந்துவிடும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது.
இதுக்கு உப்பு, எழுமிச்சை ஆகியவையே போதும். ஒரு சின்ன கின்னத்தில் இரண்டு ஸ்பூன் உப்பை போட வேண்டும். இந்த உப்போடு எழுமிச்சையை பிளிந்து நேரடியாக ஊற்ற வேண்டும். இரண்டு ஸ்பூன் உப்புக்கு, ஒரு எழுமிச்சை என்பது போதுமான அளவாக இருக்கும். இப்போது ஒரு பேஸ்ட் போன்று இது உருவாகி இருக்கும். இப்போது இந்த பேஸ்டில் நாம் பிளிந்து சாறு எடுத்த எழுமிச்சையின் தோலை முக்கி, செம்பு பாத்திரத்தில் தேய்க்க வேண்டும்.
இதற்கு ரொம்ப அழுத்தம் கொடுக்க வேண்டியதெல்லாம் இல்லை. மெதுவாக தேய்த்தாலே செம்பின் மேல் உள்ள கருப்புகள் எல்லாம் அதிசயம் போல் மாயமாகிவிடும். இப்போது இதன் மேல் தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். அதன் பின்பு துணியால் துடைத்துவிட்டுப் பாருங்கள்…இப்போ தான் கடையில் இருந்து வாங்கி வந்த செம்பு பானையைப் போல் சும்மா தக,தகன்னு மின்னும்!
வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.