சிலருக்கு உடலில் நீர்த்தேக்கம் ஏற்பட முக்கிய காரணம் உடலில் தேங்கும் அதிகப்படியான சோடியம் ஆகும். இந்த சோடியத்தால் நமது உடலிலுள்ள திசுக்கள் அழற்சிக்கு உள்ளாகிறது. இந்தப் பிரச்சனை வராமல் தடுக்க அதிகப்படியான ஆல்கஹால் மற்றும் சேச்சுரேட்டேடு கொழுப்புகளை உணவிலிருந்து நாம் தவிர்க்க வேண்டும்.

இந்த மாதிரியான நீர்த்தேக்கத்தால் கால்கள் வீங்கி போய் நடக்கவே முடியாத அசெளகரியமான சூழ்நிலை உருவாகும். கால்களில் ஏற்படும் இந்த நீர்த்தேக்கம் பெண்களை விட ஆண்களையே அதிகமாக தாக்குகிறது. அதிலும் கோடை காலங்களில் மற்றும் உடலின் சீரோட்ட நிலையில் ஏற்படும் பாதிப்பால் தான் இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுகிறது.

நீர்த்தேக்கம்
நீர் தேங்கும் பகுதியில் உள்ள திசுக்கள் அங்குள்ள நச்சு நீரினால் அழற்சியாகி அந்த நீர் அப்படியே இரத்த நாளங்களுக்கு செல்கிறது. இதனால் கால் பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது. சில நேரங்களில் வலி கூட ஏற்பட வாய்ப்பிருகிறது. இந்த நீர்த் தேக்கத்தை எப்படி சரி செய்வது என்பதை பற்றி தான் இப்பகுதியில் நாம் காண போகிறோம்.


நீர்த்தேக்கம் ஏற்படக் காரணங்கள்
அதிகப்படியான உடல் எடை கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்குதான் கால்களில் இந்த நீர்த்தேக்கம் ஏற்படுகிறது. பேருந்து, இரயில் மற்றும் விமானத்தில் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பதாலும் கால்களில் நீர்த்தேக்கம் ஏற்படுகிறது.

சில நேரங்களில் நீங்கள் சாப்பிடும் சில மருந்துகள் கூட இந்த நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால் சில குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது இந்த நீர் கோர்த்தல், வீக்கங்கள் ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக உங்களுடைய மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். அந்த மாதிரியான மருந்துகளை மாற்றச் சொல்லுங்கள்.


மூட்டுகளில் ஏற்படும் விபத்துகள் கூட கால்களில் நீர்த்தேக்கம் ஏற்பட காரணமாக இருக்கலாம்.வெரிக்கோஸ் வீன்ஸ் போன்றவற்றாலும் கூட, நீர் கோர்த்தல் ஏற்படும். இதய நோய்கள் மற்றும் இரத்த ஓட்ட பாதிப்புகள் அதிக நேரம் நின்று கொண்டே வேலை பார்ப்பதாலும், உணவில் உப்பை அதிகம் சேர்த்துக் கொள்வதாலும் ஏற்படலாம்.

எனவே இந்த நீர்த்தேக்கத்தை சரியாக கண்டு கொள்ளவில்லை என்றால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். உடனே மருத்துவரை அணுகி ஆலோசனைகளை பெறுவது நல்லது. இந்த நீர்த் தேக்கத்தை போக்க சில வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. அதையும் நீங்கள் செய்து பார்க்கலாம்.

பெருஞ்சீரக டீ

பெருஞ்சீரகம் உடல் எடையை குறைப்பதோடு இதுபோன்ற பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. பெருஞ்சீரக டீ இந்த நீர்த் தேக்கத்தை போக்க உதவுகிறது. இந்த டீயை ஒரு நாளைக்கு இரண்டு முறை என சாப்பிட்டு வருவதால் நல்ல மாற்றம் தெரியும்.

தேவையான பொருட்கள்

1 டீ ஸ்பூன் பெருஞ்சீரகம் (5 கிராம்)

1/2 டீ ஸ்பூன் நட்சத்திர வடிவ பூ(3 கிராம்பு)

1 கப் தண்ணீர் (200 மில்லி லிட்டர்)

தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவு‌ம். பிறகு வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் பருகவும்.

குதிரைவாலி மூலிகை டீ

நீர்த்தேக்கத்தை சரி செய்ய மிகவும் சிறந்தது. மருந்து கடைகளில் இது கிடைக்கிறது. அடைபட்ட இரத்த ஓட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்கிறது. இதிலுள்ள சிலிக்கான் சருமத்தை புதுப்பித்து பாதிக்கப்பட்ட திசுக்களை சரி செய்கிறது.

நமது உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி விடுகிறது. இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே நீர்த்தேக்கம் உள்ளவர்கள் இந்த டீயை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்லது.

உப்பு


நீர்தேக்கத்திற்கு முக்கிய காரணம் உணவில் அதிகப்படியான உப்பை எடுத்துக் கொள்வதுதான். எனவே தினசரி உணவில் சரியான அளவு உப்பை மட்டுமே சேர்க்க வேண்டும். அதிகப்படியான உப்பை சேர்த்துக் கொள்வதால் கால்களில் நீர் தேங்கி அந்த நீர் வியர்வையின் மூலமாகவோ அல்லது சிறுநீர் வழியாகவோ வெளியேற முடியாமல் கால்களில் தேங்கி வீக்கம் ஏற்படுகிறது.

செய்ய கூடாதவை
சேச்சுரேட்டேடு உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள செயற்கை பானங்கள், ஸ்வீட்ஸ், மைதா போன்ற உணவுகளும் இந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இந்த மாதிரியான உணவுகளைத் தவிர்த்து உணவில் கீழ்க்காணும் பொருட்களை சேர்த்து கொள்ளுங்கள்.

செய்யக் வேண்டியவை
அதிக அளவிலான உப்பைத் தவிர்த்து விடுங்கள். வெங்காயம், அஸ்பாரகஸ், பார்சிலி, செலரி, கூனைப் பூ, கீரைகள், தண்ணீர், பழம், பேரிக்காய், அன்னாசி, வாழைப்பழம், முலாம் பழம், சுருள் வகை செடி (என்டிவ்), கத்தரிக்காய் போன்ற உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிக அளவில் நீர் அருந்துங்கள்
நீர்த்தேக்கம் ஏற்பட்டால் முதலில் அதிகமாக நீர் அருந்துங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் ஒரேயடியாக தண்ணீரைக் குடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொள்ளுங்கள்.

நடப்பதற்கான ஆடைகள், காலணிகளை அணிந்து கொண்டு தினமு‌ம் அரைமணி நேரமாவது நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.

இவ்வாறு நடப்பதால் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்கள் இரத்த குழாய்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது. இதனால் உங்கள் சருமம் எலாஸ்டிக் தன்மையுடன் இருக்கும்.

இந்த மாதிரியான ஆரோக்கியமான உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களால் ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்யுங்கள்.