இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதனால் எப்போது ஷூட்டிங், டப்பிங், பட விழாக்கள் என பிஸியாக இருந்த பிரபலங்கள் அனைவரும் வீட்டின் உள்ளேயே முடங்கியுள்ளனர்.
தற்போது கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நாட்களை குடும்பத்துடன் செலவிட்டு வரும் அவர்கள், அடிக்கடி தங்களுக்கு பிடித்த சமையல் செய்து அசத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகர் ஆர்யாவின் காதல் மனைவி, தன்னுடைய கணவருக்கு விதவிதமான கேக் போன்ற சில உணவு பொருட்களை செய்து கொடுத்து அசத்தி வருகின்றார்.
மேலும், சாயிஷா அவரின் பிரம்மாண்டமான வீட்டில் அலங்காரம் செய்த பகுதிகளின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
அது மாத்திரம் அல்ல, அவர்கள் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் ரசிகர்கள் அனைவரையும் பொறாமைப்பட வைத்துள்ளது.