கொரோனா வைரஸ் ஆனது மக்களை நாளுக்குநாள் ஆ ட்டிப்படைத்து வ ருகிறது. கொ ரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்க உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் தீ விர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 21 தடுப்பூசிகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் கொரோனாவால் அதிகம் பா திக்கப்பட்டு இருக்கும் நாடுகளில் ஒன்றான ரஷ்யா கொரோனா தடுப்பூசி உருவாக்கி மனிதர்கள் மீது செலுத்தும் சோதனையில் வெற்றி பெற்று விட்டதாக அறிவித்தது.

ஆனால் ரஷ்யா மு தல்கட்ட சோதனை மட்டுமே செய் திருப்பதாகவும் இன்னும் 3 கட்ட சோதனைகள் மீதமிருப்பதாகவும் கூறப்பட்டது.மேலும், தாங்கள் மிகவும் பாதுகாப்பான தடுப்பூசியை உ ருவாக்கி இருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உ ள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் கூ றுகையில், ” 18 பேர் இந்த சோதனையில் பங்கெடுத்தனர். கடுமையான பா தகமான நிகழ்வுகள், சுகாதார புகார்கள், சிக்கல்கள் அல்லது பக்க விளைவுகள் எதுவும் இல்லாமல் பாதுகாப்பாக மீண்டனர்.

சோதனைகளின் முடிவுகள் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நல்ல சகிப்புத்தன்மை குறித்து நம்பிக்கையை அளித்துள்ளது. ஜூலை இறுதிக்குள் மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக முடியும்,” என நம்புகிறோம் என்று தெரிவித்து உள்ளது.