தமிழ் சினிமாவிற்கு புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது, குறிப்பாக நடிகைகள். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள் என்று சொல்லலாம். இந்நிலையில் “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ந்த வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நடிகை யாஷிகா சேலை கட்டி, நெற்றி வகிடில் பொட்டு வைத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாக திருமணம் முடிந்த பெண்கள் மட்டுமே நெற்றி வகிடில் பொட்டு வைப்பது வழக்கம் என்பதால் நடிகை யாஷிகாவின் இந்த செயலை பார்த்து அவருக்கு திருமணம் முடிந்து விட்டதா.? என ரசிகர்கள் தற்போது இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அது மட்டும் இல்லை, நடிகை யாஷிகா தொழிலதிபர் ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக அவ்வப்போது வ தந் திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இந்த புகைப்படம் அதை மேலும் உ றுதி செய்வதாக அமைந்தது துன்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகை யாஷிகா, அது போட்டோ ஷூட்டிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனவும் பதிலளித்துள்ளார் அவர்.