இந்தியாவில் தன் கணவர், அவரின் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் படி தொந்தரவு செய்வதாக மனைவி புகார் கொடுத்திருப்பது அதி ர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாகர். இவருக்கு கடந்த 2002 ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முன்னர் இவர் தான் ஒரு எம்பிஏ பட்டதாரி என்றும் சுயமாக ஜவுளி நடத்தி வருவதாகவும் கூறி, திருமணம் செய்துள்ளார்.

சுயமாக தொழில் செய்து வருகிறார் என்று எண்ணி, பெண்ணின் வீட்டார் சுமார் 50 சவரன் நகை மற்றும் சீர் வரிசை பொருட்கள் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த 6 மாதத்திற்கு பிற பெண் வீட்டில் ஒரு காரை கூடுதல் வரதட்சனையாக கேட்டுள்ளார்.

அதற்கு பெண் வீட்டில் மறுப்பு தெரிவித்ததால் சாகர் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். சிறிது காலம் அப்படியே நகர, சாகர் ஒரு எம்பிஏ பட்டதாரி இல்லை என்றும் வரதட்சிணையாக கொடுத்த நகை மற்றும் பணத்தை கொண்டு தொழில் தொடங்கி அதில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதையும் அவரது மனைவி கண்டுபிடித்தார்.

இதை தட்டி கேட்ட மனைவியை சாகர், அடித்து உதைத்ததோடு, தனது நெருங்கிய நண்பர்களோடு நெருக்கமாக இருக்கும் படியும், அதனால், தானும் நண்பர்களின் மனைவிகளோடு நெருக்கமாக இருக்க முடியும் என ஆசைப்பட்டுள்ளார்.

அதற்கு மறுத்த மனைவியை அவர் வீட்டை விட்டு துரத்தியுள்ளார். சிறிது காலம் அம்மா வீட்டில் இருந்த பெண், தான் கொடுத்த வரதட்சிணையை திருப்பி கொடுக்கவும், சாகர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் நிலையத்தில் பு கார் அளித்துள்ளார். பு காரின் பேரில் விசாரிக்க சென்ற பொலிசார் சாகர் ஏற்கெனவே அமெரிக்காவுக்கு தப்பி சென்றது தெரிய வந்தது.

இந்நிலையில், சாகரின் பெற்றோரிடமும், அவரது நண்பர்களிடமும் பொ லிசார் விசாரணை செய்து வருகின்றனர். அமெரிக்காவுக்கு தப்பிய அவரை கை து செய்ய நடவடிக்கை எடுத்தும் வருகி ன்றனர்.