எப்பவும் டென்ஷனாவே இருக்கிங்களா...அதனால என்ன பிரச்சனை வரும்னு உங்களுக்கு தெரியுமா... உங்க டென்ஷன முற்றிலும் குறைக்க சில எளிய வழிகள் இங்க இருக்கு...!!

நம்மில் பல பேருக்கு டென்ஷன் கோபத்திற்கு அடிப்படையாக அமைந்து விடுகிறது. இதனால் மனதில் இறுக்கமும், அழுத்தமும் ஏற்பட்டு உடலை பாதிக்கிறது. டென்ஷனைக் குறைப்பது உடலுக்கு நல்லது. ஏனெனில் அதிக டென்ஷன் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மாரடைப்பை உண்டாக்கும்.


மேலும் மன அழுத்தம் மற்றும் டென்ஷனாக இருந்தால் ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யுங்கள். இல்லையெனில் ஒன்று இரண்டு மூன்று என நூறு வரை எண்ணுங்கள். இதனால் மனதின் சிந்தனை வேறு பக்கம் சென்று மன அழுத்தம் குறையும்.

மன அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி தியானத்தைப் பழகிக் கொண்டு தினமும் தியானம் செய்தல் அவசியம். அதுமட்டுமின்றி நாம் இருக்கும் இடத்திலோ அல்லது நாம் பயணம் செய்யும் பொழுதோ தியானம் செய்யலாம்.

மேலும் மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்தல் அவசியம். தியானம் செய்ய முடியாதவர்கள் அவர்களின் மத கடவுளை நினைத்து வழிபடலாம்.

அதுமட்டுமின்றி நம் உடலில் டென்ஷன் குறைய ஆரோக்கியமான தூக்கம் முக்கியம். மேலும் காற்றோட்டமுள்ள இடத்தில் சூரியனைப் பார்த்த அறையில் தூங்குவதும் அவசியம். சரியான நேரத்தில் உறங்க வேண்டும்.

நம் உடலுக்கு உடல் உழைப்பு முறையான தூக்கத்தை உண்டாக்கும். எந்த சூழ்நிலையிலும் வேகத்தைத் தவிர்த்து மெதுவாக செயல்ப்பட்டு வந்தால் டென்ஷனைத் தவிர்க்கலாம். சிந்தித்து பொறுமையாக செய்தால் நம் மனம் அமைதி பெறும் டென்ஷன் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

error: Content is protected !!