இந்தியாவில் துப்புறவு பணி செய்யும் ஏழை தம்பதிக்கு விலையுயர்ந்த பொருட்கள் கீழே கிடைத்த நிலையில் அதை அவர்கள் உரியவரிடம் ஒப்படைத்ததற்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் நவி மும்பையை சேர்ந்தவர் சித்தார்த். இவர் மனைவி ஸ்மிதா. இவர்கள் நகராட்சியில் துப்புறவு பணியாளர்களாக இருந்தனர்.
இந்த நிலையில் சித்தார்த் வீட்டின் அருகே ஒரு பர்ஸ் இருந்தது, அது பார்ப்பதற்கு தனது மனைவி பர்ஸ் போலவே இருந்ததால் அதை எடுத்து கொண்டு ஸ்மிதாவிடம் காட்டியுள்ளார் சித்தார்த்.
ஆனால் தான் பர்ஸை தொலைக்கவில்லை எனவும் அது தன்னுடையது கிடையாது எனவும் ஸ்மிதா கூறியதையடுத்து அதை இருவரும் திறந்து பார்த்தனர்.
அப்போது உள்ளே ரூ 3 லட்சம் மதிப்புடைய தங்கத்தாலியும், பணமும், ஆவணங்களும் இருந்தது.
இதையடுத்து அதை உரிமையாளரிடம் ஒப்படைக்க தம்பதி முடிவெடுத்து இது குறித்து வாட்ஸ் அப்பில் செய்தியை வெளியிட்டனர்.
அந்த தகவல் தீயாக பரவிய நிலையில் பிரீத்தி என்ற பெண் வந்து பர்ஸில் உள்ள பொருட்கள் குறித்து சரியாக கூறினார்.
இதை தொடர்ந்து அவர் தான் அதற்கு உரிமையாளர் என முடிவுயெடுத்து அவரிடம் பர்ஸை தம்பதி ஒப்படைத்தனர்.
ப்ரீத்தி கூறுகையில், தாலி அடங்கிய பர்ஸை தொலைத்த பின்னர் மிகவும் வருத்தத்தில் இருந்தேன்.
தற்போது மீண்டும் அது கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது. பலரும் அதை தாங்கள் எடுத்து கொள்ளவே நினைப்பார்கள், ஆனால் சித்தார்த்தும், ஸ்மிதாவும் மிகவும் நேர்மையானவர்கள் என கூறியுள்ளார்.
இதனிடையில் தம்பதியின் நேர்மையை பாராட்டி நகராட்சி மன்றம் அவர்களை கெளரவப்படுத்தியுள்ளது.
அதன் ஊழியர் கசாரே கூறுகையில், இந்த கொரோனாவால் பொருளாதாரம் விடயத்தில் பலரும் பாதிப்படைந்துள்ளனர்.
இது போன்ற கடினமான சூழலிலும் அந்த பர்ஸை இருவரும் உரியவரிடம் ஒப்படைத்தது மிகவும் பாராட்டுதலுக்குரியது என கூறியுள்ளார்.