வெந்தயம் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் போன்றது. காரணம் உணவிலும்,முக அழகிற்கும், முடி வளர்ச்சிக்கும் என அனைத்து வகையிலும் பயன்படுகிறது.

வெந்தயம் மிகச்சிறந்த மருத்துவப் பலன்களை கொண்ட ஒரு உணவுப்பொருள். நம் வீட்டு சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கிறது அதனை நாம் தினமும் பயன்படுத்தி வருகிறோம்.அது உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

வெந்தயம் மிகச்சிறந்த மருத்துவப் பலன்களை கொண்ட ஒரு உணவுப்பொருள். நம் வீட்டு சமையலறையில் இருக்கிறது அதனை நாம் தினமும் பயன்படுத்தி வருகிறோம். அது உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

முடி உதிர்வு :

முடி உதிர்வுக்கு பெருமளவில் பயன்படுகிறது. வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்திடுங்கள். மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து உங்கள் தலைமுழுவதும் பூசிக் கொள்ளுங்கள்.

அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு கழுவி விடலாம். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம். இது உங்கள் முடி அதிகமாக உதிர்வதை தடுப்பதுடன் முடி வறட்சியின்றி இருக்கவும் உதவுகிறது. இதிலிருக்கும் நிகோடினிக் அமிலம் தலைமுடிக்கு போஷாக்கு அளிப்பதால் தலைமுடி நீளமாக வளர்ந்திடும்.

முன் நெற்றி முடி உதிர்வு :

இரண்டு ஸ்பூன் பொடி செய்த வெந்தயத்தை நிறமாறும் வரை ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கலந்து சூடாக்குங்கள். வெந்தயம் நிறமாறும் வரை சூடாக்க வேண்டும். லேசாக சிவந்ததும் இறக்கி விடலாம். பின்னர் அதனை ஆற வைக்கவும்.
குளிக்கப் போகும் முன் தலையில் தேய்த்து மசாஜ் செய்திடுங்கள். நீங்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். இதில் தேங்காய் எண்ணெய்க்கு பதில் நல்லெண்ணையையும் பயன்படுத்தலாம். உங்கள் முடிக்கு எவ்வளவு எண்ணெய் தேவையோ அந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

அரிப்பு :

சிலருக்கு தலையில் அரிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். தலையை சொறிந்து கொண்டே இருப்பார்கள். தலையில் அரிப்பு ஏற்ப்பட்டால் அதனை வெந்தயத்தைக் கொண்டு சரி செய்யலாம். சிறந்த பலனைத் தரும். வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை தலையில் தேய்த்து குளியுங்கள்.

உங்கள் தலைமுடி அதிக வறட்சியானதாக இருந்தால் வெந்தயப் பேஸ்ட்டில் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து ஹேர் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் ஊறியதும் தலைமுடியை அலசி விடலாம். வெந்தயத்தில் இருக்கும் லெசித்தின் என்ற அமிலம் தலையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றை போக்க உதவுகிறது.