தலை முதல் கால்வரை ஒன்று போல் இருக்கும் Anna மற்றும் Lucy DeCinque (34), ‘world’s most identical twins’ என்று அழைக்கப்படுகிறார்கள். அதாவது உலகில் பல இரட்டையர்கள் இருந்தாலும், உலகத்திலேயே இவர்களைப்போல் யாரும் ஒரே மாதிரி இல்லையாம்.

அப்படிப்பட்ட இந்த இரட்டையர்கள், உடை உடுத்தினாலும், நகை போட்டுக்கொண்டாலும், என்ன செய்தாலும் ஒரே மாதிரிதான் செய்வார்கள்.

அதனால், ஒரே ஆணை திருமணம் செய்துகொண்டார்கள் என்றால் பாருங்களேன்.

சாப்பிடுவதும் தூங்குவதும் ஒரே மாதிரி இருந்தாலும் கழிவறைக்கு செல்வது வரை ஒரே நேரத்தில் நடந்தாலும், ஒரே நபரையே திருமணம் செய்துகொண்டிருந்தாலும், குழந்தை ஒரே நேரத்தில் பிறக்காது என்பதால், அதற்கும் ஒரு திட்டம் வைத்துள்ளார்கள் சகோதரிகள்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த அபூர்வ சகோதரிகள், தங்கள் 9 ஆண்டு கால காதலரான (கணவரான) Ben Byrne (39) உடன் வாழ்ந்துவருகிறார்கள்

தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ள சகோதரிகள், ஒரே நேரத்தில் கருவு றுவதற்காக, தங்கள் கருமுட்டைகளை சேகரித்து, ஒரே நேரத்தில் உறையவைத்து, செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முயன்று வருகிறார்கள்.

நாங்கள் வாழ்க்கையில் எல்லாம் ஒரே நேரத்தில் நடக்கவேண்டும் என்று விரும்புகிறோம், ஒரே காலத்தில் முதுமையை அனுபவித்து, ஒரே நேரத்தில் இற க்கவும் விரும்புகிறோம்.

அப்படி இருக்கும் நிலையில், கருவுறுவதும் கர்ப்பத்தை சுமப்பதும் ஒரே காலகட்டத்தில் எங்கள் இருவருக்கும் நிகழவேண்டும் என்று விரும்புகிறோம் என்கிறார்கள் Annaவும் Lucyயும்.

You missed