96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

அதன் பிறகு இளைஞர்களின் மனதை கொ ள் ளை ய டி த் த ‘டி க் கி லோ னா’ புகழ் அனகா, கௌரி கிஷனோடு இணைந்து ‘ம கி ழி னி’ என்ற இசை வீடியோவில் கைகோர்த்துள்ளனர்.

இது ஓரினச்சேர்க்கை, பற்றிய கருத்துக்களை பதிவு செய்கிறது. இந்த பாடலை எழுதி இயக்கியவர் வி.ஜி. பாலசுப்ரமணியன்.

இதனை பற்றி ஒரு பேட்டியில், “கௌரி, அனகா, இருவரும் பரதநாட்டிய வகுப்பில் நடனத்தின் மீதான காதலால் சந்திக்கிறார்கள். ஒரு ஒத்திகையின் போது ஆசிரியர் அவர்களை ஒரு நிகழ்ச்சிக்காக இணைத்ததால், இது ஒரு நுட்பமான நெருக்கத்தின் தொடக்கத்தைத் தூண்டுகிறது.” என்று கூறியுள்ளார்.

ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ம கி ழி னி’ வீடியோ (இன்று) நவம்பர் 22ஆம் தேதி சரேகமா ஒரிஜினல்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும்.