அமலா பால் மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.

ஒருபுறம் பரபரப்பாக சினிமாவில் நடிப்பது, மறுபுறம் ஊர் சுற்றுவது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது, யோகா, சமையல், பார்ட்டி கொண்டாடுவது எனவும் அசத்தி வருகிறார்.

நடிகர் விஷ்ணுவுடன் அவர் நடித்திருந்த ’ராட்சசன்’ படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதனையடுத்து தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கின.

மேலும், நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக வேட்டை படத்தில் நடித்தார். தலைவா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகா நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் இயக்குனர் AL விஜயுடன் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.இப்படத்தை அடுத்து அவர் கைவசம் 5 படங்கள் இருக்கிறது. தற்போது அமலாபால் நடித்துள்ள ‘அதோ அந்த பறவைப்போல’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது.

இந்த படத்துக்கு தணிக்கை குழு ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளது. ‘அதோ அந்த பறவைப்போல’ திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ” இப்போதே பூத்திடுங்கள்.. சரணடையுங்கள்.. எழுங்கள்..” என்று கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.