பிக் பாஸ் வனிதா விஜயகுமாரிடம் நாஞ்சில் விஜயன் மன்னிப்புக் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுபற்றி நடிகை வனிதா விஜயகுமார் பதிவிட்டுள்ளார்.
நாஞ்சில் விஜயன் நேற்று என்னிடம் பேசினார். நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னார். அவரும் நானும் சந்தித்தது கூட இல்லை. அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை.
ஆனால், இந்த குழப்பங்கள் அனைத்துக்கும் சூரியாதேவிதான் காரணம். இடையில் கஸ்தூரி உள்ளே புகுந்து சூழலை தவறாகப் பயன்படுத்தி உள்ளார்.
மற்றவர்களின் பிர ச்னைகளை ஆராய்வதை விட்டுவிடுங்கள். அவர்கள் பிரச்னையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள். இடையில் நீதிபதியாகவோ, வழக்கறிஞராகவோ விளையாட முயற்சிப்பதுதான் பிரச்னையை பெரிதாக்குகிறது.
நாஞ்சில் விஜயனிடம் அவரது வீடியோக்கள் பற்றிய எனது அதிருப்தியை வெளிப்படுத்தினேன்.
அதை விரைவில் நீக்குவதாகவும் அதுபற்றி தானே விளக்கம் ஒன்றை வெளியிடுவதாகவும் நாஞ்சில் விஜயன் சொன்னார். அவர் தேவையில்லாமல் இந்த விஷயத்தில் இழுத்து விடப்பட்டுள்ளார் என நினைக்கிறேன்.
அவர் திறமையான இளைஞர். வளர்ந்து வரும் நேரத்தில் சர் ச்சை கள் அவருக்கு தேவையில்லை என்று நினைத்ததால் அவர் மன்னிப்பை ஏற்றுக்கொண்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் பர பர ப்பையும், அதி ர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.