நடிகை ஷாலு ஷம்மு, கடந்த 2013 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்தவர்.
இப்படத்தை அடுத்து மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்திருந்தார். தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக இவர் தனது சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதர்க்காகவே இவரை 3 லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்கிறார்கள். அப்படியானவர்களை ஏமாற்றி விட கூடாது என்பதால் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சியை இறக்கி வைக்கிறார் அம்மணி.
முன்னணி நடிகைகள் கூட இப்படி ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்க மாட்டார்கள், அந்த அளவிற்கு இவர் நடத்தும் போட்டோஷூட் அனைத்தும் ரசிகர்களிடம் பிரபலம், அதுவும் சமீப காலமாக இவர் போட்டோ ஷூட்டில் எல்லைமீறி போகிறார் என்ற கமெண்டும் ரசிகர்கள் மத்தியில் எழாமல் இல்லை.
இது ஒரு பக்கம் இருந்தாலும் இவரது அழகை கவிதை எழுதி வர்ணிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். சமீபத்தில், சர்ச்சை நடிகை மீரா மிதுன் அடியாட்களை கொண்டு எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார் ஷாலு ஷம்மு.
இந்நிலையில், நல்லவராக இருங்கள், மற்றவர்கள் உங்களை அப்படி இருக்க விடாத வரை என்று கூறி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.