கேரளாவில் விமான விபத்தில் உ யிரிழ ந்த நபர், இறப்பதற்கு முன் தன்னுடைய பேஸ் புக் பக்கத்தில் சொந்த ஊருக்கு திரும்புகிறோம் என்று மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.
விபத்தில் சிக்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில், துபாயில் ஏறிய உடனே கேரளாவின் கோழிகோடைச் சேர்ந்த Sharafu Pilassery என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் back to home, அதாவது சொந்த ஊருக்கு திரும்புகிறோம் என்று மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.
ஆனால் அவரின் அந்த ஆசை நிறைவேறவில்லை. ஏனெனில் இந்த விமான விபத்தில் சிக்கி தற்போது வரை உயி ரிழ ந்துள்ள 17 பேரில் இவரும் ஒருவர், ஆனால் இவருடன் வந்த மனைவி மற்றும் குழந்தை அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Sharafu Pilassery துபாயின் தனது மனைவி மற்றும் மகளுடன் நீண்டகாலமாக வசித்து வந்துள்ளார்.
சமூக ஊடகங்கள் மற்றும் சமூக நடவடிக்கைகளில் தீவிரமாக இருப்பவர் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், Sharafu Pilassery உயி ரி ழந்த விவகாரம் அவருடைய மனைவிக்கு தெரிவிக்கப்பட்டதா? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. இருப்பினும் குடும்பத்தினருடன் ஆசையாக சொந்த ஊருக்கு திரும்பிய அவர் பரிதாபமாக இறந் த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Breaking: Tragic news of #AirIndia Express skidded due to heavy rains.
Sad to hear this news!! May the pilot REST IN PEACE and I hope the passengers and the crew are safe Om Shanti 🙏
— Anis Farooqui (@anis_farooqui) August 7, 2020