கன்னியின் கடைக்கண் பார்வை பட்டுவிடாதா என வாலிப வயதினரே காதலுக்காக ஏங்கி நிற்க, 73 வயது தாத்தா ஒருவர் இளம்பெண்ணை பேசியே உஷார் செய்திருக்கிறார். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

காதல் எந்த வயதில் எப்போது, யாருக்கு யார் மீது வரும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படியான ஒரு சம்பவம்தான் இது. ஆஸ்திரேலிய நாட்டின் ரேச்சல் ராபர்ட்ஸ்(33) என்னும் இளவயது பெண், தன் வீட்டு அருகில் காரில் போய்க்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த பஸ் ஸ்டாப்பில் எந்வ் மெக்டேர்மோட் என்னும் 73 வயது தாத்தா நின்று கொண்ட் இருந்தார்.

அவருக்கு காலில் அறுவை சிகிட்சை செய்யப்பட்டு இருந்ததால் நடக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த ரேச்சல் தாத்தாவுக்கு லிப்ட் கொடுக்க இருவரும் பேசிக்கொண்டே போனதில் நெருக்கமாகிவிட்டார்கள்.

அப்போதே ஒருவர் மீது ஒருவர் காதல்வயப்பட்டாலும் வயது வித்யாசம் இருந்ததால் இருவருமே வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. ஆனாலும் இவர்க அடிக்கடி நட்புரீதியாக சந்தித்து வந்தனர். இந்நிலையில் அண்மையில் ரேச்சலின், தந்தை இறந்துபோனார். அப்போது ஆறுதல் சொல்ல போன தாத்தா மீது ரேச்சலுக்கு காதல் மீண்டும் தளிர்த்தது. இதோ இவர்களுக்கு இப்போது திருமண தேதி பிக்ஸ் ஆகியுள்ளது.

நம்மூரு வாலிப பசங்க பலரும், வடிவேலு காமெடியில் சொல்வது போல் முத்துன கத்திரிக்காயாக இருக்க, காதல் சிரிக்கெட்டில் விக்கெட் எடுத்திருக்கிறா 73 வயசு தாத்தா!