பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக மனிஷா யாதவ் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடி இளசுகளை சூடேத்தினார்.

எல்லாப் படங்களிலும் ஆண்களிடம் ஏமாந்து போவதற்காகவே சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் மனிஷா யாதவ் என தோன்றுமளவு அவரது படங்கள் அமைந்தன. வழக்கு எண் படத்தில் எதிர் வீட்டு பையனிடம் ஏமாந்து போவார். ஆதலால் காதல் செய்வீர் படத்தில் காதலனிடம் ஏமாந்து போவார். குப்பை கதை படத்தில் கள்ளக்காதலனிடம் ஏமாந்து போவார்.

திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால், லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா. குறித்த உடம்பை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக பதிவேற்றியுள்ளார்.