பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முன்னணி கதாபாத்திரமான தனம் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் சுஜிதா.

இதற்கு முன் பல சீரியல்களிலும், படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவின், திருவனந்தபுரத்தில் பிறந்த சுஜிதா, இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு சத்யராஜின் ’பூவிழி வாசலிலே’, ரஜினியின் ‘மனிதன்’, மம்மூட்டியின் ‘அழகன்’ உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ‘வாலி’, இருவர்’, ’பள்ளிக்கூடம்’, ‘தாண்டவம்’, ‘தியா’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் திரையைப் பகிர்ந்துள்ளார் சுஜிதா. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

சுஜிதா விளம்பர துறையைச் சேர்ந்த தனுஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது. எப்போதும், புடவை சகிதமாகவே தென்படும் இவர் மாடர்ன் உடைகளில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

error: Content is protected !!