பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது.
பின்னர் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இவர் நடிகர் மோகன் ராமன் அவர்களின் மகள். 2012 ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்ட கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் மற்றும் எட்டோ வெளிபொயிந்தி மனசு திரைப்படங்களில் வித்யுலேகா முதன்முதலில் தோன்றினார்.
அதில் ஜென்னி என்னும் கதாபாத்திரத்தில் நாயகி சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து சுந்தர் சி. இயக்கத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படத்தில் நடித்தார். பிறகு அஜித்தின் வீரம் திரைப்படத்திலும், விஜயின் ஜில்லா திரைப்படத்திலும் நடித்தார்.
இதுவரை காமெடி கதாபதிரங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வித்யுலேகாவா இது என்று ஆச்சரியப்படவைக்கும் படி உள்ளன.
அந்தவகையில் தற்போது குட்டை பாவாடை, சட்டை சகிதமாக சட்டையை கழட்டி விட்டு நிற்கும் கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
அவரது இந்த உடல்குறைப்பு முயற்சியை கண்டு பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். ஆனால், சிலர் உடல் எடை குறைந்தவுடன் ஆடையின் அளவும் குறைந்துவிட்டது என கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.