பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலையில், நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), கொரோனா தொற்றுக்குள்ளாகி, சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குகின்றன.

நுரையீரல் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர, உயிர்காக்கும் உபகரணங்கள் வழியாக, ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகின்றது.

மருத்துவமனை வட்டாரத்தில் கூறுகையில், ‘சிகிச்சைக்கு, அவரது உடல் நிலை நன்கு ஒத்துழைக்கிறது. ‘ஆன்டிபயாடிக்’ கொடுக்கப்பட்டது.
மெதுவாக, அவரது உடல்நிலை தேறி வருகிறது.’எனினும், அவர் உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் சுவாசிப்பதால், ‘க்ரிட்டிகல்’ என்றே, மருத்துவ ரீதியில் குறிப்பிட வேண்டியுள்ளது.

தற்போதுள்ள நிலையில், தொடர் சிகிச்சை அளிக்கப்படும்போது, குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

பாடகர் எஸ்.பி..பி. நலம் பெற வேண்டி இன்று மாலை 6 மணிக்கு அவரவர் வீடுகளில் எஸ்.பி.பி.யின் பாடலை ஒலிக்கவிட்டு கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு திரையுலகினரை இயக்குனர் பாரதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார். இதில் கமல், ரஜினி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

error: Content is protected !!