வண்ண வண்ண காகிதங்களை கொண்டு பூக்கள் தயாரித்து கோடிகளில் வருமானம் ஈட்டி வருகின்றனர் ஹரிஷ் மற்றும் ராஷ்மி தம்பதியினர்.

பெங்களூரை சேர்ந்த இந்த தம்பதியினர் இரண்டு நிறுவனங்கள் மூலம் கலை மற்றும் கைவினைப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த 2004ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு வருமானம் மட்டும் 64 கோடி ரூபாயாகும்.

தாங்கள் உயர்வது மட்டுமன்றி கர்நாடக கிராம பெண்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தி வருகின்றனர்.

இதன்மூலம் அந்த பெண்கள் மாதந்தோறும் ரூ.12,000 வரை வருமானமாக ஈட்டுகின்றனர், இதிலும் குறிப்பாக இவர்களது நிறுவனத்தில் 5 சதவிகிதம் பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

ஆரம்பத்தில் பெங்களூருவில் நிறுவனம் தொடங்கிய போது நஷ்டத்தை சந்தித்து இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அந்நேரத்தில் இங்கிலாந்தில் இருந்து ஓர் ஓர்டர் வந்திறங்க, மீண்டும் புன்னகையுடன் தொழிலை தொடங்கியுள்ளனர்.

அத்துடன் ஹரிஷ் வேலை பார்த்த நிறுவனத்தின் முதலாளியும் உதவி செய்ய தொழில் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றது.

இவர்களது சிறப்பம்சமே கைகளால் ஆன காகிதப் பூக்களை உருவாக்குவது தான், இதுதவிர மணிகளையும் விற்பனை செய்கின்றனர், இதனை கொண்டு அழகான நகைகளை வாடிக்கையாளர்களே உருவாக்கி கொள்ளலாம்.

முதல் மூன்று ஆண்டுகள் ஹரிஷ் மற்றும் ராஷ்மி, சம்பளமாக ரூ.20,000த்தை மட்டுமே எடுத்துக் கொண்டு லாபத்தை மீண்டும் முதலீடாக மாற்றியதும் முக்கிய காரணம் என நினைவுகூர்கிறார் ஹரிஷ்.