நடிகை மீரா மிதுன் நடிகர்கள் சூர்யா, விஜய், நடிகை த்ரிஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்து அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இழிவாக பதிவிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், முதன்முதலாக தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர்கள் சூர்யா, விஜய் ஆகியோரையும் அவர்களது குடும்பங்களையும் மீராமிதுன் இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. சூர்யா கல்வி போன்ற நல்விஷயங்களை செய்து வருகிறார்.

சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மற்றவரை தூற்றி பழித்து அதில் கோட்டை கட்டாதீர்கள். அது மண்கோட்டையாகத்தான் இருக்கும்.

சகல கலைஞர்களின் குடும்பங்களை அவதூறாக பேசியும் எந்த சங்கமும் குரல் கொடுக்காதது வியப்பையே அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார். கிட்ட தட்ட கடந்த 10 நாட்களாக இந்த சர்ச்சை நிலவிக்கொண்டிருகின்றது.

மேலும், இளம் நடிகை ஷாலு ஷம்மு-வை வேறு இந்த விவாகரதிற்குள் இழுத்து விட்டுள்ளார் மீரா மிதுன். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மீரா மிதுன் காருக்குள் அமர்ந்து கொண்டு புகை பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், கன்னங்கள் ஓட்டிப் போகும் அளவுக்கு புகையை உறிஞ்சிய படிஅமர்ந்துக்கொண்டிருக்கிறார் மீரா மிதுன். இந்த லட்சணத்தில் இருந்து கொண்டு நீங்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் மனைவியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறீர்களா.? என்று விளாசி வருகிறார்கள் ரசிகர்கள்.