சன் மியூஸிக்கில் தன் பயணத்தை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அப்படி கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற, அப்படத்தின் நடிகர் சந்திரனுக்கு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவை கண்டதும் காதல்.

சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். சென்னையில் பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் அங்கேயே முடித்தார்.

2008 ஆம் ஆண்டில் அஞ்சனாவுக்கு “மிஸ் சின்னத்திரை” விருது வழங்கப்பட்டது. இந்த விருது தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் திறமையான மற்றும் நேர்த்தியான நட்சத்திரங்களுக்கு வழங்கப்படுகிறது.

சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த போதிலும், நடிப்பின் மீது ஆர்வமில்லை என ஸ்ட்ரிக்டாக தவிர்த்து விட்டார் அஞ்சனா. இருந்தாலும் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு கணவருக்காக வாய்ப்புகளை தேடி கொண்டு வருகிறார்.

கல்யாணத்திற்கு முன்பு வரை கவர்ச்சி ஆடையில் போட்டோக்கு போஸ் கொடுத்தது ஒன்றும் பிரச்சினையில்லை ஆனால் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அவர் கவர்ச்சி உடையில் அளித்துள்ள போட்டோவுக்கு போஸ் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

error: Content is protected !!